Asianet News TamilAsianet News Tamil

தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை.. எந்த நாட்டில் இருக்கு தெரியுமா..?

அண்டார்டிகாவில் இருக்கும் ஒரு எரிமலை, தினமும் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கக்கி வருகிறது. இந்த எரிமலையின் தூசியில் சுமார் 8 கிராம் வரை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

mount erebus volcano in antarctica spewing gold dust everyday in tamil mks
Author
First Published Apr 20, 2024, 4:33 PM IST

உலகில் தங்கம் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது மற்றும் அதற்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்களுக்கு தெரியுமா.. உலகில் தினமும் கோடி மதிப்புள்ள தங்கம் உருவாகும் இடம் ஒன்று இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை அடைய முடியாது.

அந்த இடம் வேறு எங்கும் இல்லை, உலகில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றான 'அண்டார்டிகா' தான். இந்த  கண்டத்தில் 138 எரிமலைகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய சொத்து மதிப்புள்ள தங்கத்தூளை குமிழும் எரிமலை ஒன்று இங்கு உள்ளது. அதுதான் "மவுண்ட் எரெபஸ்". 

இந்த எரிமலை தினமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கக்கி வருகிறது. இந்த எரிமலையில் இருந்து தினமும் வெளியேறும் தூசியில் தங்கத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி, எரிமலையில் இருந்து தினமும் வெளிவரும் தங்கத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த எரிமலை தூசியை ஆய்வு செய்வதன் மூலம் தங்கம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று IFL சயின்ஸ் ஆய்வில் சொல்லுகிறது. 

இதையும் படிங்க: “கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு.. ஆனால் அது..” விஞ்ஞானிகள் சொன்ன தகவல்

'தங்கத்தூள்' என்று குறிப்பிடப்படும் இந்த தங்கத் துகள்கள் அளவு 20 மீட்டருக்கு மேல் இல்லை. நாள் முழுவதும் இந்த துகள்களின் குவிப்பு தோராயமாக 80 கிராம் தங்கமாக என்று 
கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்புற காற்றில் தங்கத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தங்கு தூசிகள் பரவலாக பரவுவது விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். இந்த மவுண்ட் எரெபஸ் எரிமலையானது, அண்டார்டிகாவில் உள்ள டிசெப்ஷன் தீவில் அமைந்துள்ளது. இது பிராந்தியத்தில் செயல்படும் இரண்டு எரிமலைகளில் ஒன்றாகும்.

இதையும் படிங்க: "தில்லிருந்தா அந்த தீவுக்குள்ள போகலாம்".. அண்டார்டிகா தீபகற்பத்தில் ஒரு அதிசய தீவு - நாசா வெளியிட்ட வைரல் Pic!

தங்க தூசியை அடைவது ஏன் கடினம்?
மவுண்ட் எரெபஸ் எரிமலையில் இருந்து வரும் தூசிகளை சேகரிக்கவோ அல்லது மேற்கொண்டு ஆய்வு செய்யவோ கடினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில், அந்த மலையை எளிதில் அணுகுவது மிகவும் கடினம். காரணம் இந்த பகுதி பூமியின் தெற்கு எரிமலை வென்ட்டிலிருந்து 621 மைல் தொலைவில் இருப்பதால் தங்கத்தை சேகரிக்க முடியாது. இது முற்றிலும் பணியால் மூடப்பட்டு 12,448 அடி உயரத்தில் உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, இந்த மலை தொடர்ந்து வாயு மற்றும் நீராவியை வெளியிடுகிறது, மேலும் சில சமயங்களில் பாறைகளையும் கக்குகிறது. மேலும் இங்கு தங்கம் தவிர பல மதிப்பில் உலோகங்கள் உள்ளன.

மேலும், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் கானர் பேக்கனின் கூற்றுப்படி, 1972 முதல் இந்த மலை தொடர்ந்து வெடித்து வருகிறது. மலையானது அதன் உச்சிமாடு பள்ளங்களில் ஒன்றில் "லாவா ஏரி" க்காகவும் அறியப்படுகிறது. "இவை உண்மையில் மிகவும் அரிதானவை, ஏனென்றால், பணியால் மூடப்பட்டிருந்தாலும் இந்த மேற்பரப்பு ஒருபோதும் உறைவதில்லை இருப்பினும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios