Asianet News TamilAsianet News Tamil

உலக மகளிர் தினம்.. உதகை தாவரவியல் பூங்கா - படுகர் இன மக்களோடு பாரம்பரிய நடனமாடிய மாவட்ட ஆட்சியர்!

Women's Day Celebration : உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து உதகையில் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தடித்து.

இன்று சமூக நலத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளுடன் பூங்காவில் கேக் வெட்டி மகளிர் தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்களின் கலாச்சார நடனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா நடனமாடியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் சுற்றுலா பயணிகள் இணைந்து படுகர் இன மக்களின் கலாச்சார நடனமாடி உற்சாகமடைந்தனர்.

Video Top Stories