Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் இருபதுக்கு மேற்பட்ட ஆடுகளை வெட்டி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பகுதியில் மழை இல்லாததால் கிராமத்தில் கடும் வறட்சி நிலவியது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கன மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனத். மேலும் நீண்ட நாடகளுக்கு பிறகு கனமழை பெய்ததை தொடர்ந்து ஊரில் உள்ள முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கிராமத்தில் அனைத்து குடும்பத்தினரும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி வழிபாடு செய்தனர். கனமழை பெய்ததை  கிராம மக்கள் ஆடு வெட்டி சிறப்பாக கொண்டாடிய இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Video Top Stories