Asianet News TamilAsianet News Tamil

Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!

MP Kanimozhi Election Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் துவங்க உள்ளது, ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்திய முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (01/04/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மந்திதோப்பு பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி அவர்களை குறித்து பேசினார்.  

"மோடி தமிழ் தெரியவில்லை என்று நாடகம் ஆடுகிறார். எனக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாய் இருக்கிறது என்று கூறுகின்றார். தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் வருத்தப்பட வேண்டும், எங்களை எல்லாம் இந்தி கற்க சொல்றீங்க, நீங்க தமிழ் கத்துக்கோங்க! நாங்கள் ஒரு நல்ல ஆசிரியரை பார்த்து அனுப்பி வைக்கிறோம், இதற்கு ஏன் வருத்தம்" என்று கிண்டலாக பேசியுள்ளார். 

Video Top Stories