Asianet News TamilAsianet News Tamil

சிங்காநல்லூர்.. பிரபல ஸ்வீட் கடையில் இனிப்புகள் வாங்கி முதல்வருக்கு அளித்த ராகுல் காந்தி - CCTV Video Viral!

Rahul Gifted Sweets to CM : இன்று கோவையில் நடந்த பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் போட்டியிடவுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

திமுகவின் பல கோட்பாடுகள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக பிரதிபலிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக ராகுல் காந்தியை பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல கன்னியாகுமரியில் துவங்கிய அவரது நடை பயணத்தை தான் துவங்கி வைத்ததாகவும் பெருமையோடு கூறினார் முதல்வர் ஸ்டாலின். 

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா ஸ்வீட்ஸ் கடையில் ராகுல் காந்தி இனிப்புகளை வாங்கிய காட்சி CCTV காட்சிகள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கோவையில் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி அவர் இனிப்புகளை வாங்கிச் சென்றிருக்கிறார். பிரச்சார மேடை அடைந்தவுடன் அந்த இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
 

Video Top Stories