Watch : மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் ஊழியரை அரிவாளால் தாக்கிய கணவன்! அதே மருத்துவமனையில் அட்மிட்டான பெண்!

முண்டியாம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியிலிருந்த ஒப்பந்த பெண் ஊழியரை அவரது கணவரே அரிவாளால் தாக்கிதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

First Published May 3, 2023, 6:31 PM IST | Last Updated May 3, 2023, 6:31 PM IST

விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமாரின் மனைவி பரணி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய கணவர் இரண்டு தினங்களுக்கு முன்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துமனையில் பணியில் இருந்த மனைவி பரணியிடம் அவருடைய கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் கைப்பகுதியில் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த பரணி அதே மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



சக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், அவருடைய கணவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை இரண்டு நாட்களாக பார்க்க வராததால், ஆத்திரத்தில் கணவர் மனைவியை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Video Top Stories