செருப்பு தூக்க தான் உதவியாளரா? கள்ளக்குறிச்சி ஆட்சியரின் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூவாகம் கோவிலுக்கு வழிபடச் சென்ற மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் செல்ல சொன்ன சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருகின்ற 18ம் தேதி தொடங்க உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சரவண குமார் கோவிலில் ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் சென்று சாமியை வழிபட சென்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தனது காலணியை கோவில் வாசலில் கழட்டிவிட்டு பின்னர் தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் சென்று காரில் வைக்குமாறு வலியுறுத்தினார். ஆட்சியரின் இந்த செயலால் அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.