Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்; சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி - ஜூனியர் எம்ஜிஆர்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக பிரசாரம் செய்ய உள்ளேன். வருங்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் என ஜூனியர் எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதிமுக  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மனைவி ஆண்டிபட்டி காவல்துறை சார்பாக சவரியம்மாள்தேவி ஆகியோரின்  இல்ல விழாவிற்காக எம்ஜிஆர் பேரன்  என்று கூறிக்கொள்ளும் ஜூனியர் எம்ஜிஆர் என்ற வி.ராமச்சந்திரன்  கலந்து கொண்டார். முன்னதாக ஆண்டிபட்டி நகரில் வைகைஅணை சாலை பிரிவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் மாலை அணிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜூனியர் எம் ஜி ஆர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் ஆண்டிபட்டி வந்து அன்னதானம் வழங்கினோம். அதையடுத்து  திரைப்பட வேலைகள் காரணமாக இங்குவர முடியவில்லை. ஆண்டிபட்டி வழியாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

நான் எப்போதும் இரட்டை இலை தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன். எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதிமுகவை வரவேற்ற தொகுதி ஆண்டிப்பட்டி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக வாக்கு சேகரிக்க உள்ளேன். நான் வருங்காலத்தில் போட்டியிட்டால் ஆண்டிபட்டியைத்தான்  தேர்வு செய்து போட்டியிடுவேன் என்றார்.

Video Top Stories