Asianet News TamilAsianet News Tamil

Boney Kapoor : பொது இடத்தில் நடிகை பிரியாமணியிடம் அத்துமீறினாரா போனி கபூர்? காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

மைதான் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போனி கபூர், நடிகை பிரியாமணியிடம் அத்துமீறியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். தமிழிலும் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை தயாரித்த இவர், தற்போது இந்தியில் மைதான் என்கிற திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ளார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

மைதான் திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். இப்படம் ரம்ஜான் தினத்தன்று திரையரங்குகளில ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிட்ட போது அதில் கலந்துகொள்ள வந்த நடிகை பிரியாமணியிடம் தயாரிப்பாளர் போனி கபூர் அத்துமீறியதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories