Asianet News TamilAsianet News Tamil

Redmi PAD SE : பட்ஜெட் விலையில் புது Gadget.. அறிமுகமான Redmi Pad SE.. சிறப்பு அம்சங்கள் & விலை விவரம் இதோ!

Redmi PAD SE Launch : சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரின் சமீபத்திய டேப்லெட்டாக Redmi தனது புதிய Pad SEஐ இன்று செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 சிப் பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi Releasing new gadget Redmi pad se launched in india see price and spec ans
Author
First Published Apr 23, 2024, 3:45 PM IST

8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ROM கொண்ட இந்த டேப்லெட்டின் உடல் ஒரு அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 90Hz Refresh வீதத்துடன் 11 அங்குல LCD திரையைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI பேட் 14ல் இயங்குகிறது. ரெட்மி பேட் SE ஆனது 8,000mAh பேட்டரியில் இயங்குகிறது, USB Type-C போர்ட் மூலம் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இது விற்பனைக்கு வரும்.

இந்தியாவில் Redmi Pad SEன் ஆரம்ப விலை அதன் அடிப்படை மாடலான 4ஜிபி RAM +128ஜிபி ROM மாடல் 12,999க்கு கிடைக்கும். இதற்கிடையில், அதன் 6ஜிபி RAM + 128ஜிபி ROM மற்றும் 8ஜிபி RAM + 128ஜிபி ROM ஆகிய மாடல்கள் முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 14,999க்கு விற்பனையாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபோன் 15 பிளஸ் ஆஃபர்.. ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு.. வாங்குவது எப்படி?

ரெட்மி Pad SE ஆனது இந்தியாவில் கிராஃபைட் கிரே, லாவெண்டர் பர்பில் மற்றும் மின்ட் பச்சை ஆகிய மூன்று  வண்ணங்களில் கிடைக்கும். நாளை ஏப்ரல் 24 முதல் இந்தியாவில் Amazon, Flipkart மற்றும் Xiaomi சில்லறை விற்பனை கடைகள் வழியாக இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும், மேலும் வாடிக்கையாளர்கள் ICICI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பெறும்போது 1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

புதிய Redmi Pad SE ஆனது 11-இன்ச் WUXGA (1,920x1,200 பிக்சல்கள்) LCD திரையுடன் 90Hz refresh வீதம், 400 nits வரை உச்ச பிரகாசம் மற்றும் 207ppi பிக்சல் டென்சிட்டி  ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டேப்லெட்டில் 6nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, 8ஜிபி வரை LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI பேட் 14 இல் இயங்குகிறது.

நிறுவனம் Redmi Pad SE ஐ 8 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் f/2.0 துளையுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக பொருத்தியுள்ளது. இதற்கிடையில், டேப்லெட்டில் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Google Pixel : உலக சந்தையில் விரைவில் வரும் Google Pixel 8A - இணையத்தில் கசிந்த ஸ்பெக் மற்றும் விலை விவரம்!

Follow Us:
Download App:
  • android
  • ios