Shot on iPhone: எழும்பூர் மியூசியத்தில் தமிழக பள்ளி மாணவர்கள் எடுத்த போட்டோ - டுவிட் போட்ட டிம் குக்..!

Shot on iPhone: புகைப்படங்களை எடுத்த மாணவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்கள் சென்னை போட்டோ பியனெல் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

Tamil Nadu school students iPhone photography featured historic egmore museum for chennai photo biennale

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமானவை ஆகும். உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை தயாரித்து விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, பயனர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவரச் செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்பு போட்டிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் Shot on iPhone பெயரிலும் போட்டி ஒன்றை ஆப்ப்பிள் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் பேங்கேற்போர் தங்களின் ஐபோன் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி வைப்பர். 

புகைப்படங்கள் ஆய்வு:

போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் ஆப்பிள் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆப்பிள் முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளும். அதன் பின்னர் தான் சிறந்த புகைப்படங்கள் எவை என்பதை ஆப்பிள் தேர்வு செய்யும். இதே போன்று தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினி கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை போட்டோ பியனெல் எனும் தனியார் அமைப்பின் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினி கொண்டு எடுத்த 40 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நேரில் சென்று பார்த்து ரசிக்கலாம். கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை புகைப்படங்களை பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதுபற்றிய தகவலை டிம் குக் தனது டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu school students iPhone photography featured historic egmore museum for chennai photo biennale

ஏ லேண்ட் ஆஃப் ஸ்டோரிஸ்:

புகைப்படங்களில் சென்னை பள்ளி மாணவர்கள் தமிழ் நாடு கலாச்சாரம், வாழ்க்கை முறை அதன் வாழ்வியல் என பல விஷயங்களை கேமரா லென்ஸ் கொண்டு மிக அழகாக பதிவு செய்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் 'A Land Of Stories'  தலைப்பின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் புகைப்படங்களை எடுத்த மாணவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்கள் சென்னை போட்டோ பியனெல் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம் மட்டுமின்றி வி.ஆர். மாலில் உள்ள ஆப்டிரானிக்ஸ் ஸ்டோரிலும் சென்னை பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொது மக்கள் புகைப்படங்களை பார்க்க முடியும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios