ஒன்றல்ல இரண்டு - பிப்ரவரி 9 இல் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சியோமி
சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடும் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சியோமி வெளியிட்டு உள்ளது. இதே தினத்தில் ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
முன்னதாக ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிககழ்வு நிறைவுற்றதும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. டீசரில் இடம்பெற்று இருக்கும் சூசக வார்த்தைகள் புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்துகின்றன.
அதன்படி இந்தியாவில் ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 11 மாடலும் அறிமுகமாகிறது. டீசரில் மற்றொரு ஸ்மார்ட்போனின் பெயரை ரெட்மி குறிப்பிடவில்லை. எனினும், இது வென்னிலா நிறத்தில் கிடைக்கும் ரெட்மி நோட் 11 மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மாடலில் 6.43 இன்ச் 90Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ, 2MP டெப்த் கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 11S மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 108MP பிரைமைரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றப்படி மெமரி ஆப்ஷன்களை தவிர இதன் அம்சங்கள் பெரும்பாலும் ரெட்மி நோட் 11 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் தவிர சியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலையும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ஆட்டோ பிரைட்னஸ் டிடெக்ஷன் மற்றும் AMOLED கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.
இத்துடன் 110-க்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள் உள்ளன. இத்துடன் SpO2 மாணிட்டரிங், எந்நேரமும் செயல்படும் இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் வார கணக்கில் நீடிக்கும் பேட்டரி பேக்கப் வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு சியோமி இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.