ஐரோப்பாவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுக்கு எண்ட் கார்டு - தொடர்ந்து மல்லுக் கட்டும் மெட்டா
ஐரோப்பாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் விரைவில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியுமா? ஐரோப்ப வாழ் நெட்டிசன்களுக்கு விரைவில் இந்த நிலை ஏற்படலாம் என தவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் சமீபத்திய விதிமுறைகளை மெட்டா ஏற்காத பட்சத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் சேவையை நிறுத்த வேண்டும். EU-US பிரைவசி ஷீல்டு விதிகள் என அழைக்கப்படும் புதிய சட்டம், ஐரோப்பாவில் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பிய பயனர்களின் தகவல்களை அந்நாட்டு எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறுகிறது. இதற்கு மெட்டா நிறுவனம் முற்றிலும் எதிராக உள்ளது.
இதன் காரணமாக ஐரோப்பிய பகுதிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நிறுத்தப்படலாம் என மெட்டா தெரிவித்துள்ளது. "அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா இடையிலான டிரான்ஸ்-அட்லாண்டிக் டேட்டா டிரான்ஸ்ஃபர்கள் நிர்வாகம் மற்றும் விளம்பரங்களை வழங்க மிக முக்கிய தளமாக இருக்கின்றன. புதிய பிரைவசி ஷீல்டு அமலுக்கும் வரும் பட்சத்தில் இந்த பணிகளில் மெட்டா ஈடுபடவே முடியாது. இதனால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளை தொடர்ந்து வழங்க முடியாது," என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனுடன் புதிய ஒப்ந்தம் இந்த ஆண்டு கையெழுத்தாகும் என மெட்டா எதிர்பார்க்கிறது. ஒருவேளை முடிவுகள் மெட்டாவுக்கு சாதகமாக அமையவில்லை எனில், "ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்பட எங்களின் மிக முக்கிய சேவைகளை தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்படலாம்," என மெட்டா தெரிவித்து உள்ளது.
"ஆயிரக்கணக்கான வியாபாரங்களுக்கு ஏற்படும் இடையூறை குறைக்க இன்றைய பிரச்சினைகளை அனுபவத்தை கொண்டு கையாளவும், சரி விகிதமான வழிமுறைகளை பிறப்பிக்க அதிகாரிகள் துணை நிற்க வேண்டும். இதுபோன்ற அம்சங்களை சார்ந்து ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு வியாபாரங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்திய விதிகளில் திருத்தம் செய்து தரவுகளை பாதுகாப்பாக கையாள அனுமதிக்க வேண்டும்," என மெட்டா நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தகவல் பரிமாமற்ற பிரிவு துணை தலைவர் மிக் கிளெக் தெரிவித்தார்.