Google Chrome new logo : 8 ஆண்டுகள் கழித்து பட்டி டிங்கரிங் செய்யப்பட்ட கூகுள் குரோம் லோகோ

கூகுள் குரோம் லோகோ எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

Google Chrome logo gets its first paint job in 8 years

கூகுள் குரோம் பிரவுசரின் லோகோ புதிய தோற்றம் பெற இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு பின் கூகுள் குரோம் லோகோ மாற்றப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் அதிநவீன பிராண்டிங்கை வெளிப்படுத்தும்  வகையில் புதிய லோகோ உருவாக்கப்பட்டு இருப்பதாக கூகுள் தெரிவித்து உள்ளது. இந்த மாற்றம் விரைவில் அனைத்து சாதனங்களிலும் மாற்றப்பட்டு விடும்.

லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள ரெட், புளூ, கிரீன் மற்றும் எல்லோ போன்ற நிறங்களின் சேட்யூரேஷன் அதிகப்படுத்தப்பட்டு, ஷேடோக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் லோகோ அதிக மாற்றங்கள் இன்றி "லைவ்லி" அனுபவத்தை கொடுக்கிறது. 

Google Chrome logo gets its first paint job in 8 years

புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மேக் ஓ.எஸ். என ஒவ்வொரு தளங்களிலும் குரோம் ஓ.எஸ். வித்தியாசமாக காட்சியளிக்கும். மேக் ஓ.எஸ். சாதனங்களில் லோகோ 3டி தோற்றம் பெற்று இருக்கிறது. மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கூகுள் குரோம் பிரவுசரில் பீட்டா ஐகான் காட்சியளிக்கிறது. 

அடுத்த சில மாதங்களில் இந்த மாற்றங்கள் படிப்படியாக அனைத்து சாதனங்களிலும் அமலுக்கு  வருகிறது. கூகுள் குரோம் கேனரி சேனலில் 100-வது வெர்ஷனை பெற இருக்கிறது. அந்த வகையில் லோகோவில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றம் புது மைல்கல்லை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios