Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் Apple iPhone 15 விற்பனை இன்று முதல் தொடக்கம்.. அதுவும் ரூ. 14000 தள்ளுபடியுடன்! முழு விவரம் இதோ..

Apple iPhone 15 ஆனது புதிய 48MP கேமரா அமைப்பு, USB-C போர்ட், புதிய சிப்செட் உள்ளிட்ட பல வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது

Apple iPhone 15 sales in India start from today.. that too at Rs. 14000 with discount! Here is the full details Rya
Author
First Published Sep 22, 2023, 10:10 AM IST

இந்தியாவில் Apple iPhone 15 விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த புதிய ஐபோனை வாங்க முன்கூட்டியே ஆர்டர் செய்த நபர்கள் காலை 8 மணி முதல் வாங்கி வருகின்றனர். Apple iPhone 15 ஆனது Apple iPhone 15 சீரிஸின் அடிப்படை மாடலாகும், இதில் Apple iPhone 15 Plus, Apple iPhone 15 Pro மற்றும் Apple iPhone 15 Pro Max ஆகியவையும் உள்ளன. Apple iPhone 15 ஆனது கடந்த ஆண்டை விட பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Apple iPhone 15 ஆனது புதிய 48MP கேமரா அமைப்பு, USB-C போர்ட், புதிய சிப்செட் உள்ளிட்ட பல வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. எனினும் அதன் விலை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதன் முன்னோடியான Apple iPhone 14ஐப் போலவே உள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய Apple iPhone 15 இன் விலை இந்தியாவில் ரூ. 79,900 ஆகும், இருப்பினும் வாடிக்கையாளர்கள் முதல் நாளில் கூட ரூ.14000 வரை தள்ளுபடி பெறலாம். Apple iPhone 15 Plus-2ன் 256ஜிபி மாடல் மற்றும் 512ஜிபி மாடல் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 15 அறிமுகம்.. அதிரடியாக குறைந்த ஐபோனின் பழைய மாடல்கள் - எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஆப்பிள் பிரீமியம் விற்பனை கடைகள் ஆப்பிள் ஐபோன் 15 ஐ முன்பதிவு செய்த வாங்குபவர்களுக்கு ரூ. 9000 வரை எக்ஸ்சேஞ்ச் போன்ஸை வழங்குகின்றன. இது தவிர, தகுதியான HDFC வங்கி அட்டையுடன் Apple iPhone 15 மற்றும் Apple iPhone 15 Plus ஆகியவற்றில் ரூ.5000 உடனடி கேஷ்பேக்கை வாடிக்கையாளர்கள் பெறலாம். HDFC வங்கிச் சலுகை அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, விஜய் சேல்ஸ் போன்ற எலக்ட்ரானிக் ஸ்டோர்களிலும் கிடைக்கும்

Apple iPhone 15 ஆனது A16 பயோனிக் சிப் மூலம் 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Apple iPhone 15 இல் பயன்படுத்தப்படும் A16 Bionic சிப் கடந்த ஆண்டு Apple iPhone 14 Pro மாடல்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபோன் முன்புறத்தில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. ஏ16 சிப் காரணமாக ஆப்பிள் ஐபோன் 15 சிறந்த பேட்டரி ஆயுளைப் பெறும்.

ஆப்பிள் ஐபோன் 15 இன் கேமரா புதிய தலைமுறை ஆப்பிள் ஐபோனில் மிகப்பெரிய அப்டேட் ஆகும். Apple iPhone 15 ஆனது Apple iPhone 14 Pro போன்ற 48MP முதன்மை சென்சார் பெறுகிறது. 48MP கேமரா 12MP செகண்டரி சென்சார் உடன் துணைபுரிகிறது. . இந்த போனில் கீழ் விளிம்பில் USB-C போர்ட் மற்றொரு மிகப்பெரிய மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios