Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

Scorching Sun Tamilnadu Health Department Important Advice to public smp
Author
First Published May 7, 2024, 11:56 AM IST

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயில் தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம்  110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை  மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர்,  கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை இன்று பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்!

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம். வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் தண்ணீர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios