Asianet News TamilAsianet News Tamil

வேண்டுகோளோடு கஜா புயல் நிவாரணத்திற்கு ரூபாய் 1 கோடி அளித்தார் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" தலைவர் சரவணன்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட  தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து,  "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடியை கஜா புயல் நிவாரண நிதியாக  வழங்கினார் சரவணன்.

saravana store owner help gaya cylone
Author
Chennai, First Published Nov 23, 2018, 3:55 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட  தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து,  "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடியை கஜா புயல் நிவாரண நிதியாக  வழங்கினார் சரவணன்.

மேலும் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். அது என்னவென்றால் புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள  சகோதர, சகோதரிகளுக்கு, நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.. என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios