Asianet News TamilAsianet News Tamil

மேம்பாலத்திற்கு கீழ் அடுத்தடுத்து மர்மமான முறையில் கிடந்த 3 உடல்கள்.!! கொலை செய்தது யார்.? போலீசார் விசாரணை

ஜலகண்டபுரம்  மேம்பாலம் அடியில் மூன்று உடல்கள் அநாதையாக கிடந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையா?தற்கொலையா என  போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Police are investigating the discovery of 3 human bodies under the flyover KAK
Author
First Published May 3, 2024, 2:22 PM IST

மேம்பாலத்திற்குல கீழ் அழுகிய உடல்கள்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே  ஜலகண்டாபுரம் -சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் பணிக்கனூர் என்ற ஊர் உள்ளது . இந்த பகுதியில் தென்னந்தோப்பு உள்ளிட்ட தோப்புகள் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இதன் அருகேயே வாகனங்கள் செல்லும் வகையில்  மேம்பாலம் ஒன்று உள்ளது.

இந்த பாலத்தின் அடியில் இன்று காலை முதல் கடும் துர்நாற்றம் வீசுயுள்ளது. இதனயடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் அங்கு சென்று எட்டி  பார்த்துள்ளார். அப்போது ஒரு மனித உடல் கிடந்துள்ளது. இதனையடுத்து ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் நேரில் வந்து பார்த்தபொழுது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 

Police are investigating the discovery of 3 human bodies under the flyover KAK

கொலையா.? தற்கொலையா.?

சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலமும் அருகருகே கிடந்துள்ளது. அருகில் ஒரு மொபட் பைக்கும் இருந்துள்ளது. மேலும் மது பாட்டிலும் மற்றும் தண்ணீர் பாட்டில் கிடந்துள்ளது. இதனையடுத்து 3 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இறந்த மூவரும் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை.

மேலும் இறந்த மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டிலில் விஷம் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 அல்லது 3 தினங்கள் இறக்கும் என்று கூறப்படுகிறது. 

சீமந்தத்திற்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணி; வாந்தி எடுக்க வந்தபோது ரயிலின் கதவு அருகே காத்திருந்த எமன்

Follow Us:
Download App:
  • android
  • ios