Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12.15 , டீசல் ரூ.13.66 அதிகரிப்பு...!

petrol nad diesel cost is so high among one year in tamilnadu
 petrol nad diesel cost is so high  among one year in tamilnadu
Author
First Published May 15, 2018, 5:57 PM IST


கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு 24  ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த உயர்வும் இல்லாமல் இருந்து வந்தது.

இன்நிலையில், கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப உயர்த்தப் பட்டது

 petrol nad diesel cost is so high  among one year in tamilnadu

சென்னையை பொறுத்தவரை, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61. ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக  ரூ 77.43 பைசாவாக இருந்தது.

அதாவது சென்னையில் மட்டும் 18 காசுகள் உயர்ந்து உள்ளது

 petrol nad diesel cost is so high  among one year in tamilnadu

ஓர் ஆண்டுக்குள் சென்னையை பொறுத்தவரை தினசரி விலை மாற்றம் கொண்டு வரப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம்  1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 65.46 ஆக இருந்தது.ஒரு லிட்டர் டீசல் - 56.13  ஆகவும் இருந்தது

அன்று முதல் நேற்று வரை பார்க்கும் போது,

ஒரு லிட்டர் பெட்ரோல் - 12 ரூபாய்  15 காசுகளும்

டீசல் விலை - 13 ரூபாய் 66  காசுகளும் அதிகரித்து உள்ளது

தினசரி விலை மாற்றம் செய்தது இன்னும் ஓராண்டு கூட முடிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு எதிராக காங்கிரஸ் அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

 petrol nad diesel cost is so high  among one year in tamilnadu

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.மேலும், மத்தியில் ஆளும் பாஜக, அடுத்து வரும் சில ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் சொகுசு வாகனத்திற்கு பதிலாக முழுவதும் எலக்ட்ரிக் மூலம் இயங்கும் வாகனத்தை நடைமுறைக்கு கொண்டு  வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

 petrol nad diesel cost is so high  among one year in tamilnadu

அவ்வாறு நடைமுறைக்கு வரும் சமயத்தில பெட்ரோல் மற்றும் டீசல் தேவை  அதிகமாக இருக்காது மற்றும் காற்று மாசுப்படுவதும் தவிர்க்கப்படும் என்பது  நிதர்சனமான உண்மையாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios