Asianet News TamilAsianet News Tamil

ஐஐடி மாணவர்கள் பீதி... அடுத்தடுத்து அரங்கேறும் தற்கொலைகள்!

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த வடமாநில மாணவர் ஒருவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IIT student committed suicide
Author
Tamil Nadu, First Published Jan 30, 2019, 11:06 AM IST

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு படித்து வந்த வடமாநில மாணவர் ஒருவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் இதுபோல 2 சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குருசாந்த். இவரது மகன் கோபால் பாபு(26). இவர் சென்னை ஐஐடியில் எம்.டெக் முதலாமாண்டு படித்து வந்தார். கோபால் பாபு ஐஐடியில் உள்ள மாணவர் விடுதியிலேயே தங்கி படித்து வந்த இவர், சில நாட்களாக அவர் கடும் மன சோர்வுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

IIT student committed suicide

நேற்று முன்தினம் மாணவர்கள் அனைவரும் இரவு உணவு  சாப்பிட கேன்டீனுக்கு சென்றுவிட்டனர். அறையில் கோபால் பாபு மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் இருந்து போலீசார் கடிதத்தை கைப்பறியதாக கூறப்படுகிறது.

 IIT student committed suicide

அதைதொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 5-ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சென்னை ஐஐடி பேராசிரியர் அதிதி சிம்ஹா(45) குண்டு மணியை அரைத்து குடித்து  தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், ஆங்கில புத்தாண்டு அன்று இரவு சென்னை ஐஐடியில் பெண்கள் விடுதியில் ரஞ்சனா குமாரி(25)  தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல், சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios