Asianet News TamilAsianet News Tamil

கஜா புயலால் வறுமையில் சிக்கிய தந்தை.... பெற்ற மகனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற கொடுமை..!

கோரதாணடவமாடி விட்டுப்போன கஜா புயல் பாதிப்பு பெரும்பானவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டது. இதனால் சூழந்த வறுமையால் பெற்ற மகனையே விலைக்கு விற்ற அவலம் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது

Father's son sold for Rs.10 thousand!
Author
Tamil Nadu, First Published Dec 28, 2018, 3:26 PM IST

கோரதாணடவமாடி விட்டுப்போன கஜா புயல் பாதிப்பு பெரும்பானவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டது. இதனால் சூழந்த வறுமையால் பெற்ற மகனையே விலைக்கு விற்ற அவலம் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   Father's son sold for Rs.10 thousand!

டெல்டா பகுதியை சின்னாபின்னமாக்கி விட்டுப்போன கஜா புயலால் வாழ்வாதரமின்றி தவித்த, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கரிக்குடி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தனது மகனையே விலைக்கு விற்றுள்ளார். மாரிமுத்துவுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். கூலித்தொழிலாளியான இவர், ஏற்கனவே குடும்ப கஷ்டம் காரணமாகவும், பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் சிரமத்தில் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயல் தாக்கமும் அவரது வாழ்வாதரத்தை சிதைத்து விட்டு போனது. கஜா புயலில் மாரிமுத்துவின் வீடுகளும் வேலையும் பறிபோனது.  

இதனால் அன்றாட வாழ்க்கையை நகர்த்த தவித்து வந்த மாரிமுத்து, தனது 2வது மகனை நாகை மாவட்டத்தை சேர்ந்த சந்துரு என்பவருக்கு ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக வெறும் 10,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்தத் தகவல் வெளியில் பரவியது. நாகை மாவட்டத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அச்சிறுவனை மீட்டு தஞ்சை மாவட்ட சப்-கலெக்டரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். அந்தச் சிறுவன் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளான். ’’கஜா புயல் காரணமாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். அக்கம்பக்கத்தில் உதவிகள் கேட்டும் எதுவும் நடக்கவில்லை. அரசிடம் நிவாரணம் கோரியும் ஒரு பயனும் இல்லை. எனவே வேறு வழியின்றி எனது மகனை கொத்தடிமையாக விற்றேன்’’ என கண்ணீர் மல்க கூறியுள்ளார் மாரிமுத்து.

Father's son sold for Rs.10 thousand!

கஜா புயல் கோரதாண்டவத்தால் கூலித் தொழிலாளி தனது மகனையே விலைக்கு விற்ற சம்பவம் டெல்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios