Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் குடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் செத்துக் கிடந்த நாய்; கடுமையான துர்நாற்றத்தால் பதற்றம்...

A dog lying in a bottle of drinking water Tension by severe stink
A dog lying in a bottle of drinking water Tension by severe stink
Author
First Published Nov 23, 2017, 8:29 AM IST


அரியலூர்

அரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள குடிநீர் விநியோகிக்கும் தண்ணீர்த் தொட்டியில் நாய் செத்துக் கிடந்ததால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. மர்ம நபர்கள் தண்ணீர்த் தொட்டிக்குள் நாயை போட்டுள்ளனரா? என்று கோணத்தில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தின் அருகில் தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டு பணியாளர்கள் பள்ளியைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது, பள்ளிக்கு வந்திருந்த சில மாணவர்கள் தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் குடிக்கச் சென்றனர்.

அப்போது அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. மாணவர்கள் அந்த துர்நாற்றத்தால் தண்ணீர் குடிக்காமல் அங்கிருந்து வந்துவிட்டனர். மேலும், இந்த நாற்றத்தால் பள்ளிக்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து மக்கள் பள்ளி முன்பு கூடினர். அதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் அமுதா அங்கு விரைந்து வந்து துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு, தண்ணீர் தொட்டியை திறந்துப் பார்த்தார். அப்போது, தண்ணீர் தொட்டியில் நாய் ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் தொட்டியை சோப்புக் கரைசல், பிளச்சிங் பொடி ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலியபெருமாள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயா, தா.பழூர் வட்டார சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொட்டியை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தெரிவித்தது: "தண்ணீர் தொட்டியில் நாய் விழுவதற்கு வாய்ப்புகள் குறைவு. யாரோ மர்ம நபர்கள் செய்த சதியாக இருக்க லாம்.

இதுகுறித்து தா.பழூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு மாற்று இடத்தில் இருந்து சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் தொட்டியை சுமார் 10 நாள்கள் வரை தொடர்ந்து சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தண்ணீர் தொட்டியில் சுகாதாரத் தன்மையை உறுதி செய்யும் வரை அதிலிருந்து குடிநீர் விநியோகிக்கப் படாது. எனவே, மக்கள், மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios