விழுப்புரத்தில் கொரோனா வார்டில் முதியவர் உயிரிழப்பு.. அடுத்தடுத்து மரணங்கள்.. மக்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
Villupuram covid-19 symptoms...old man dead
விழுப்புரத்தில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கிய உள்ள கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 1,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை மே 3 வரை நீட்டித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
Villupuram covid-19 symptoms...old man dead

இந்நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதான முதியவர் காய்ச்சலால் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வந்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் கொடுத்திருந்தார்.  இந்நிலையில், உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு  வருவதற்குள் இன்று  அவர் உயிரிழந்தார். ஆகையால், முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்தாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி, முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. 
Villupuram covid-19 symptoms...old man dead

இதனிடையே, நாகர்கோவிலில் இது போன்ற 5க்கும் மேற்பட்ட  மரணங்கள், கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே நிகழ்ந்திருக்கின்றன. ஆகையால் இந்த மரணங்களும் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்ளை எழுப்பி வருகின்றது. 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios