ஒரே இரவில் விழுப்புரத்தை தலைகீழாக போட்ட கொரோனா... 136 பேர் பாதிப்பு... சிகப்பு மண்டலத்தை நோக்கி நகர்வு..
கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வந்தாலும் கொரோனாவின் தாக்கல் சற்றும் குறையவில்லை. நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 2,757 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது. பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றி தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இதில், கோயம்பேட்டில் இருந்து திரும்பிய பெரும்பாலான தொழிலளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 86 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதியதாக 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு திரும்பியதில் தொற்று ஏற்பட்டவரின் உறவினர்கள் மீட்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.