அதிமுக பிரமுகரின் தொடர்பில் இருந்த 34 பேருக்கு நோய் தொற்று இல்லை.. நிம்மதி பெருமூச்சு விடும் செஞ்சி மக்கள்..!
கடந்த மாதம் சென்னை பீனிக்ஸ் மால் சென்று வந்த செஞ்சியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், தொழிலதிபர் மகனுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செஞ்சி தனியார் மருத்துவர் மாரிமுத்துவிடம் சிகிச்சை பெற்றார். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. இதனையடுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி கடந்த 1ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
செஞ்சி நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உட்பட தொடர்பில் இருந்த 34 பேருக்கு கொரோனா பாதிப்பில்லை என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் சென்னை பீனிக்ஸ் மால் சென்று வந்த செஞ்சியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், தொழிலதிபர் மகனுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செஞ்சி தனியார் மருத்துவர் மாரிமுத்துவிடம் சிகிச்சை பெற்றார். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. இதனையடுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி கடந்த 1ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும், அவரது பெற்றோருக்கும் நோய் தொற்று பரவியதால் தனி வார்டில் தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர், ஸ்கேன் சென்டர் உரிமையாளர் மற்றும் தொழிலதிபரின் பால் நிறுவனம், வீட்டில் வேலை பாத்தவர்கள், அக்கம் பக்கத்தினர் என 34 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்தினர். இவர்கள் அனைவருக்கும் நோய் தொற்று இல்லை பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.