Asianet News TamilAsianet News Tamil

இபிஎஸ் எங்கு இருக்காரே தெரியல.. இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும்.. ஓ.பன்னீர் செல்வம் சரவெடி!

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். 

AIADMK will come under our control.. O. PanneerSelvam tvk
Author
First Published Apr 19, 2024, 12:51 PM IST

2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணி சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவரது சொந்த ஊரான தேனி  பெரியகுளத்தில் வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகனும் எம்.பி.யுமான ஓ.பி. ரவீந்திரநாத்தும் வாக்களித்தார்.

இதையும் படிங்க: இன்னைக்கு ஒரு நாள் தான் தேர்தல்; நாளை நான் யாரென காட்டுரேன் - திமுக நிர்வாகியின் மிரட்டலால் போலீஸ் அச்சம்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்: ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன். தற்போது ராமநாதபுரம் செல்கிறேன். இந்தியா முழுவதும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற அலை உள்ளது. மக்கள் நல்ல ஆதரவை தருகிறார்கள். 

இதையும் படிங்க:  விஜய்யின் சர்க்கார் பட பாணியில் வாக்கு திருட்டு... 49பி தேர்தல் விதிப்படி வாக்கு செலுத்திய சென்னை வாக்காளர்

அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும். எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios