பயங்கரம்! தனியார் பேருந்தில் தீ விபத்து.. நூலிழையில் 50 பயணிகள் தப்பித்தது எப்படி? திக்.. திக்.. நிமிடங்கள்.!
காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
வந்தவாசி அருகே நள்ளிரவில் தனியார் பேருந்து பாலத்தின் மீது மோதியதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதால் 50 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து வீரம்பாக்கம் அருகே உள்ள கூட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்றதால் பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பின்னர் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு வேகமாக அனைவரும் வெளியேறினர். கிடுகிடுவென தீ அனைத்து இடங்களில் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.