காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்... அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வெளியானது டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்… பதிவிறக்கம் செய்வது எப்படி? விவரம் உள்ளே!!
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜன.23 வரை முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்... அறிவித்தார் அமைச்சர் உதயநிதி!!
அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.