Asianet News TamilAsianet News Tamil

24 மணி தடையின்றி நேரமும் ஜோராக நடைபெறும் மது விற்பனை; ஆவேசமடைந்த மக்களால் பரபரப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்து 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வந்த நிலையில், ஆவேசமடைந்த பொதுமக்கள் மது பாட்டில்களை சூறையாடினர்.

people protest against illegal liquor selling in dharmapuri district
Author
First Published Apr 29, 2023, 6:19 PM IST

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மலை கிராமம் பூதிநத்தம். இப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும். குடிமகன்களின் தேவையை பயன்படுத்தி பூதிநத்தம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மது அருந்திவிட்டு மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல், போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கலில் லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

இதனை எதிர்த்து கிராமத்திற்க்குள் மது விற்க அனுமதிக்க  கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறைக்கும் வருவாய்துறைக்கும் மது விற்போர் மாதந்தோறும் மாமூல் வழங்குவதாகவும், இதனால் மது விற்பவர்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. 

Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

இதனால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராமமக்கள்  ஒன்று திரண்டு சட்ட விரோதமாக சந்துகடை வைத்து மதுவிற்கும் ஜெயராமன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டு மது பாட்டில்களை உடைத்து சூறையாடினர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபானங்களை வீதியில் கொட்டி உடைத்தனர். இதனால் மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடியது. தகவலறிந்து  காவல் துறையினர் மீதமுள்ள சுமார் 200 மது பாட்டில்கள், அங்கிருந்த  இருசக்கர வாகனம் மற்றும் கார் ஒன்றினை பறிமுதல் செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios