பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வரவில்லையா? இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் டோக்கன் வராதவர்கள் புகார் தெரிவிக்க சிறப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. பரிசு தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம், அளவு உள்ளிட்டவற்றை அரசு வரன்முறை செய்துள்ளது.
கரூரில் சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயம் பாதிப்பு; அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
மேலும் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் மாவட்ட வாரியாக நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பல பொருட்கள் கெட்டுப்போனதாகவும், தரமற்ற முறையிலும் இருந்ததாக பல்வேறு மாவட்டங்களிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்த முறை வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அந்தந்த மாவட்டத்தில் பரிசு தொகுப்பு தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கவனித்து வருகின்றனர்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் தற்போது வரை யார், யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்கள் புகார் தெரிவிக்க புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு வட்டத்தில் உள்ளவர்கள் 8637616667 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மதுரராந்தகம் புகார் எண் .8248212994
செய்யூர் புகார் எண். 9597373617
திருக்கழுக்குன்றம் புகார் எண். 9940624877
திருப்போரூர் புகார் எண். 9944336339
வண்டலுர் புகார் எண். 7708931572