Asianet News TamilAsianet News Tamil

கால் வலியோடு தவிக்கும் தோனி – சுரேஷ் ரெய்னா கையை பிடித்துக் கொண்டு மெதுவாக படியில் இறங்கி வந்த தல!

கால் வலியோடு அவதிப்பட்டு வரும் தோனி படிக்கட்டில் இறங்குவதற்கு சின்ன தல சுரேஷ் ரெய்னா உதவிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Suresh Raina helps MS Dhoni When he was Struggling to walk in steps, watch video here rsk
Author
First Published Apr 16, 2024, 8:55 PM IST

ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். சிஎஸ்கே என்றாலே தல தோனி தான் என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போது தோனியை பார்ப்போம், அவரது தரிசனம் எப்போது கிடைக்கும், பேட்டிங்கை எப்படி பார்க்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் உண்டு.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். என்னதான் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும், மைதானத்தில் பீல்டிங் செட் செய்வது எல்லாம் தோனி தான். இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

 

 

கடைசியாக மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அரைசதம் அடித்திருந்தாலும், அதைப் பற்றி எல்லாம் பேச்சு இல்லை.  ஆனால், கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா ஓவரில் தல தோனி 4 பந்துகளை எதிர்கொண்டார். இதில், 3 பந்துகளில் 6, 6, 6 என்று ஹாட்ரிக் சிக்ஸர் பறக்க விட்ட வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியா டிரெண்டிங். இன்னமும் தோனிவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனிலும் தோனி கால் வலியால் அவதிப்பட்டு வருவதை பலமுறை பார்க்க முடிந்தது. ஆம், இடது காலில் அவ்வப்போது ஐஸ்பேக் வந்து வலம் வருகிறார். அப்படி ஒரு வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மும்பை போட்டியை முடித்துக் கொண்டு சிஎஸ்கே வீரர்கள் லக்னோவிற்கு புறப்பட தங்கியிருந்த அறையிலிருந்து வெளியில் வருகின்றனர்.

 

 

அதில், தோனி நண்பனான சின்ன தல சுரேஷ் ரெய்னா உடன் கையை பிடித்துக் கொண்டு வருகிறார். அப்போது படிக்கட்டில் இறங்குவதற்கு சுரேஷ் ரெய்னா உதவி செய்திருக்கிறார். ரெய்னாவின் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக படிக்கட்டிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி செல்கிறார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சிஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லக்னோவின் ஹோம் மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios