Asianet News TamilAsianet News Tamil

இன்று சித்திரை மாத அமாவாசை 2024... தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் இதுதான்!

இன்று சித்திரை மாத அமாவாசை. இந்த அமாவாசை நாளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் எப்போது என்பதை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

chithirai amavasai 2024 date tharpanam time significance and its benefits in tamil mks
Author
First Published May 7, 2024, 9:59 AM IST

அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபடும் நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்நாள் இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் ஒன்றாகும். அமாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தர்மம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். 

அந்த வகையில் இன்று (மே 07) தமிழ் முதல் மாதமான சித்திரை மாத அமாவாசை ஆகும். இந்த அமாவாசை சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், சித்திரை மாத அமாவாசை சூரியன் உச்சம் அடையும் மாதத்தில் வருவதால் இந்த அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். எனவே, இந்த அமாவாசை நாளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் எப்போது என்பதை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

2024 சித்திரை அமாவாசை தேதி மற்றும் திதி நேரம்:
இந்த ஆண்டு சித்திரை அமாவாசை செவ்வாய்க்கிழமையான இன்று (மே.07) கொண்டாடப்படுகிறது. சித்திரை அமாவாசை திதியானது, 07 மே 2024 அன்று காலை 11.17 மணிக்கு தொடங்கி, 08 மே 2024 புதன்கிழமை அன்று காலை 09.19 மணிக்கு முடிவடைகிறது. அமாவாசை திதி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நாளை (மே.08) காலை, அதாவது புதன்கிழமை அன்று 9.19 மணிக்கு முடிவடைவதால் அமாவாசை திதி முடிந்த பிறகு பகல் பொழுதில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது படையல் செய்யக்கூடாது. எனவே, இன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் சூரிய உதயத்திற்கு பிறகு புனித நீராடி விட்டு காலை 11 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்யலாம்.

இதையும் படிங்க: தை அமாவாசை 2024 எப்போது..? தேதி,  நேரம் மற்றும் தர்பணத்தின் பலன்கள்.. 

சித்திரை அமாவாசை 2024 பலன்கள்: 
சித்திரை மாதம் என்பது ஆன்மீகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் வரும் அமாவாசை திதியில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும், வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி ஓடும், வீட்டில் வறுமை நீங்கும், நீண்ட நாள் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இதையும் படிங்க:  மகாளய அமாவாசை அன்று ஏன் வாழைக்காய் முக்கியம் தெரியுமா? ..தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

தானம் தர்மங்கள்: 
பொதுவாகவே அமாவாசை நாளில் தானம் தர்மங்களை வழங்கினால் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே, ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை  அவற்றை தானமாக வழங்குங்கள். அதுவும் குறிப்பாக, சித்திரை மாத அமாவாசையில் தான தர்மங்கள் செய்தால் அதற்கான பலன்கள் இரண்டு மடங்காக கிடைக்கும் என்பது ஐதீகம்.

சூரிய பகவானின் ஆசி: 
சித்திரை மாதத்தில் தான் சூரியபகவான் கிழக்கு திசையில் உதிப்பதால், இந்த மாதத்தில் வரும் அமாவாசையில் விரதம் இருந்து சூரியனுக்கு நீர் படைத்து வழிபட்டால் ஜாதகத்தில் சூரியனின் பலம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் சந்திரனின் பலம் அதிகரிக்க, இந்த சித்திரை மாத அமாவாசையில் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios