Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் சைக்கிளில் ஏறி காங்கிரஸ் கப்பலில் கவிழ்ந்த ஜி.கே.வாசன்... பரிதாபத்தில் தாமக!

ஒரு காலத்தில் 10.6 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற தாமகவின் நிலை இப்போது அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. வெறும் (புள்ளி) .56 சதவிகித வாக்குவங்கியை மட்டுமே வைத்துள்ள ஜி.கே.வாசனை கூட்டணிக்கு எந்த கட்சிகளும் நாடவில்லை. இதனால் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் அவர். 

GK Vasan, who was on board a bicycle
Author
Tamil Nadu, First Published Dec 28, 2018, 1:58 PM IST

ஒரு காலத்தில் 10.6 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற தாமகவின் நிலை இப்போது அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. வெறும் (புள்ளி) .56 சதவிகித வாக்குவங்கியை மட்டுமே வைத்துள்ள ஜி.கே.வாசனை கூட்டணிக்கு எந்த கட்சிகளும் நாடவில்லை. இதனால் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் அவர். 

இன்று (டிசம்பர் 28 அன்று) 55-வது அகவையில் அடி எடுத்து வைத்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். அவர் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அண்மையில் 5-ஆம் ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியே வாக்கு வங்கியை இழந்துவிட்டு நிற்கிற சூழலில், அந்தக் கட்சியிலிருந்து விலகி 5 ஆண்டுகள் தனிக்குடித்தனம் நடத்தி முடித்துள்ள வாசனின் வாக்கு வாங்கி எப்படி உள்ளது?GK Vasan, who was on board a bicycle

இருபது ஆண்டுகளுக்கு முன்பு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சி என்றால், அது காங்கிரஸ் கட்சிதான். ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால், அது வெற்றிக் கூட்டணியாகவே இருந்தது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அப்போது அப்படி.1989-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஜி.கே. மூப்பனார் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது 26 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 19.83 சதவீத வாக்குகளைப் பெற்றது காங்கிரஸ்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது1998 நாடாளுமன்றத் தேர்தலில்தான். இந்தத் தேர்தலின்போதும் தமிழக காங்கிரஸ் பிளவுபட்டிருந்தது. ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) திமுகவுடன் கூட்டணி அமைந்திருந்த காலகட்டம் அது. காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டு 5 சதவீதம். 1999-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்குச் சென்றது. திமுக கூட்டணியில் இருந்த தமாகா தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தமாகா பெற்ற வாக்குகள் 10.6 சதவீதம். ஆக, 1998-ல் காங்கிரஸ் கட்சி தனித்தும், 1999-ல் தமாகா தனித்தும் பெற்ற மொத்த வாக்குகளைக் கூட்டினால் 15.6 சதவீதம் வரும். 20 ஆண்டுகளுக்கு முன்புகூட 15 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த கட்சியாக காங்கிரஸ் இருந்தது.GK Vasan, who was on board a bicycle

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்கு 4.3 சதவீதம். அந்தத் தேர்தலில் ஜி.கே.வாசனும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். அதாவது, காங்கிரஸும் தமாகாவும் ஒன்றாகச் சேர்ந்து பெற்ற வாக்குகள் இது. இதில் பழைய தமாகாவின் வாக்கு எவ்வளவு என்று யாரும் நிச்சயம் சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து 2014 நவம்பரில் ஜி.கே.வாசன் வெளியேறினார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜி.கே.வாசன் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். 26 தொகுதிகளில் போட்டியிட்ட ஜி.கே.வாசன் கட்சி, 0.54 சதவீத வாக்குகளைப் பெற்றது. தமிழ் நாடு முழுவதும் தமாகாவுக்கு எத்தனை வாக்கு சதவீதம் உள்ளது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1999-ம் ஆண்டில் தமாகா தனித்து போட்டியிட்டு 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. தன் அப்பாவைப்போல 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அவருடைய வாக்கு வங்கி தெரியவரும். ஆனால், பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியே பெரும் ஆட்டத்தைக் கண்டுள்ள நிலையில், தமாகாவின் வாக்கு வங்கியைப் பற்றி அறிய தேர்தல் ஒன்றே ஒரே வழி.GK Vasan, who was on board a bicycle

1996-ம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது இருந்த சூழல் வேறு. கட்சித் தொடங்கிய உடனே நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி, ரஜினியின் ஆதரவு வாய்ஸ், அதிமுகவுக்கு எதிராக வீசிய பேரலை என தமாகவுக்கு வெற்றி வீடு தேடி வந்தது. அன்றைய அரசியல் சூழலில் திடீர் குழந்தையாகப் பிறந்த தமாகவை தமிழக வாக்காளர்கள் தொட்டிலில் போட்டு தாலாட்டினார்கள்.

ஆனால், இன்று நிலைமையே வேறு. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியே கரைந்துவிட்டது. இதில், முன்னாள் காங்கிரஸ்காரரான வாசன் எப்படி கரையேரப் போகிறார்? தனது ஆதரவாளர்களை எப்படிக் கரைச் சேர்க்க போகிறார்? வாக்கு வங்கியை எப்படி உயர்த்தப் போகிறார்? இவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி! 

Follow Us:
Download App:
  • android
  • ios