Asianet News TamilAsianet News Tamil

மோடி ஆட்சியை தூக்கி எறிய இரும்பு பெண்மணி அழைத்ததால் வந்தேன்... ஸ்டாலின்!!

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் மாநில எதிர்கட்சிகளின் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் வங்க மொழியில் உரையை தொடங்கினார். 

dmk chief mkStalin says general elections will be the second freedom struggle
Author
Kolkata, First Published Jan 19, 2019, 2:42 PM IST

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் மாநில எதிர்கட்சிகளின் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் வங்க மொழியில் உரையை தொடங்கினார். 

பின்னர் பேசிய அவர் இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திற்காக இரும்பு பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என தமிழகத்திற்கும் கொல்கத்தாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. கட்சிகள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரின் எண்ணமும் ஒன்றுதான், அது மோடியை வீழ்த்த வேண்டும் என்பது தான் என்று கூறினார். dmk chief mkStalin says general elections will be the second freedom struggle

பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் 2-வது சுதந்திர போராட்டம் என விமர்சனம் செய்தார். எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான் எதிர்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். எந்த கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் குறித்தே பிரதமர் மோடி பேசுகிறார். நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது.  dmk chief mkStalin says general elections will be the second freedom struggle

500, 1000 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட்டு மக்களை வஞ்சித்ததில் ஊழல் இல்லையா? அதை யாருடைய நலனுக்காக செய்தார்? அப்படிப்பட்ட மோடி ஊழலை பற்றி பேசலாமா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை போல மோடி ஆட்சியில் ஊழலும் ஒரே இதில் குவிந்து கிடக்கிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும் என விமர்சனம் செய்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios