Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு எதிராக தீப்பொறி கிளப்பும் விஜயகாந்த் வெறியர்... ரகளையில் ஈடுபட்ட திமுக தொண்டர்..!

சென்னையில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்தபோது மதுபோதையிலிருந்த திமுக தொண்டர் ஒருவர் கூட்டத்தில் திடீரென ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

DMDK-dmk clash
Author
Tamil Nadu, First Published Oct 14, 2019, 4:29 PM IST

சென்னையில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்தபோது மதுபோதையிலிருந்த திமுக தொண்டர் ஒருவர் கூட்டத்தில் திடீரென ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதன் 15-ம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம் நேற்று இரவு கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் நடைபெற்றது. தேமுதிகவின் 131-வது வட்டச் செயலாளர் சீனிவாசன் இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் போரூர் தினகர், தலைமை கழகப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DMDK-dmk clash

இந்நிகழ்ச்சியில் பேசிய தீப்பொறி செல்வதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். அப்போது, குடிபோதையில் வந்த நபர், "எங்கள் தலைவரைப் பற்றி எப்படி அவதூறாகப் பேசலாம்? தலைவரைப் பற்றி பேச நீ யார்?" எனக் கூறி ரகளையில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

DMDK-dmk clash

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான ஆசைத்தம்பி (40) என்பது தெரிய வந்தது. இதனால், பிடிபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகிகள் ஒருபுறமும், பிடிபட்ட நபருக்கு ஆதரவாக திமுகவினர் மறுபுறமும் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios