Asianet News TamilAsianet News Tamil

Nungu Sarbath : கோடையில் உடல் குளுகுளுனு இருக்க ருசியான 'நுங்கு சர்பத்'..! ரெசிபி இதோ..

இந்தக் கோடையில் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்க நுங்கு சர்பத் எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

ice apple or nungu sarbath recipe in tamil and its benefits during summer mks
Author
First Published May 6, 2024, 4:05 PM IST

'நுங்கு' கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் அரிதாகவே காணப்படும் ஒரு பழமாகும். நுங்கு ஆங்கிலத்தில் 'ஐஸ் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது. மற்றும்  இது தென்னிந்தியாவில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது. கோடையில் இந்த பழம் சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இது தவிர, இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். 

ஊட்டச்சத்துக்கள்: 
நுங்கில், கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறைந்த கலோரிகள் கொண்ட இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் சி, ஏ, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. எனவே, கோடையில் சாப்பிட கூடிய சிறந்த பழமாக கருதப்படுவதில் ஆச்சரியமில்லை..!

இதையும் படிங்க:  Summer Drink : கோடையில் குளூ குளூ.. உடனே நுங்கு ஜூஸ் செய்து குடிங்க.. ரெடிபி இதோ!!

நுங்கு நன்மைகள்: 

  • கோடையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்கவும் நீரிழிப்பு ஏற்படுவதை தடுக்கவும் நுங்கு பெரிதும் உதவுகிறது.
  • நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்து. இதனால் கோடையில் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாம்.
  • கோடையில் நீங்கள் மலச்சிக்கல் வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற வயிற்று பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தால் நீங்கள் நிச்சயமாக நுங்கு சாப்பிட வேண்டும். ஏனெனில், இது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை எளிதாக குணப்படுத்தும்.
  • நுங்கில் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதே வயதான செயல்முறையை தாமதப்படுத்த பெரிதும் உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். ஏனெனில், இதில் அதிக தண்ணீர் இருப்பதால் வயிற்றை நிறைவான உணர்வாக வைத்திருக்கும் மற்றும் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது.
  • கோடையில் ஏற்படும் பொதுவான தோல் பிரச்சனைகளான தோல் வெடிப்பு, தோல் எரிச்சலால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த பழத்தை தடவினால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை தணித்து அசெளகரியத்தை போக்கும்.
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சினை மற்றும் குமட்டலை தவிர்க்க இந்த சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க செய்யும்.
  • நுங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கல்லீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள இந்த பழத்தில் சர்பத் செய்து குடித்து இருக்கிறீர்களா..? 'நுங்கு சர்பத்' என்பது தென்னிந்தியாவில் விற்கப்படும் ஒரு பிரபலமான ரோட்டோர பானம் ஆகும். நுங்கு சர்பத் மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். கோடையில் இந்த பானத்தை குடித்தால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி குடிப்பார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் நுங்கு சர்பத் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்..

இதையும் படிங்க:  Nungu Benefits : கோடை சீசனில் நுங்கு ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் தெரியுமா..? அதன் நன்மைகள் இதோ!!

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை - 1/2
நன்னாரி சிரப் - 3 ஸ்பூன்
நுங்கு - 1/4 கப் 
பனிக்கட்டி - 1/4 
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: 
நுங்கு சர்பத் செய்ய முதலில் நுங்கை நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒருவேளை உங்களால் மென்மையாக பிசைய முடியவில்லை என்றால், அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி கிளாஸில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகள், பிறகு அரைத்து வைத்த நுங்கு, அதன் மேல் நன்னாரி, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான நுங்கு சர்பத் ரெடி!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios