Asianet News TamilAsianet News Tamil

அட்டகாசமான சுவையில் சத்தான 'இன்ஸ்டன்ட் அடை தோசை'.. ரெசிபி இதோ!

இந்த பதிவில் இன்ஸ்டன்ட் அடை தோசை ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

breakfast recipes tasty and healthy instant adai dosai recipe in tamil mks
Author
First Published May 3, 2024, 7:30 AM IST

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை மற்றும் இரவு உணவு எதுவென்றால் இட்லியும் தோசையும் தான். குழந்தைகள், முதியவர்கள், உடம்பு சரியில்லாதவர்களுக்கு இந்த உணவுகள் ஏற்றதாகும். குறிப்பாக காலை மற்றும் இரவில் மிகவும் விரைவாக செய்யக்கூடிய ரெசிபி எதுவென்றால், அது இட்லி மற்றும் தோசை ஆகும். ஆனால், திடீரென இட்லி தோசை செய்வதற்கு மாவு இல்லை என்றால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்கள். ஆனால் இனி நீங்கள் இட்லி தோசைக்கு மாவு இல்லை என்றால் சிரமப்பட வேண்டாம். ஆம்.. உங்களுக்கான ஒரு ஸ்பெஷலான ரெசிபியை கொண்டு வந்துள்ளோம். அதுதான் 'இன்ஸ்டன்ட் அடை தோசை' ஆகும். ஒரு முறை கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். 

இந்த இன்ஸ்டன்ட் அடை தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒரு முறை இதை நீங்கள் செய்தால் கண்டிப்பாக மீண்டும் செய்ய தூண்டும். உங்கள் வீட்டில் உள்ள குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இந்த பதிவில் இன்ஸ்டன்ட் அடை தோசை ரெசிபியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 
ரவை - 1 கப்
கடலை மாவு - 1 கப்
தயிர் - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காயத் தூள் - சிறிதளவு 
பச்சை மிளகாய் - 1(நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
இன்ஸ்டன்ட் அடை தோசை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, கடலை மாவு, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இன்றி நன்கு கலக்கி, பின் 20 நிமிடம் மூடி வைத்து விடுங்கள். இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு  தாளிக்க வேண்டும். பிறகு அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின் அதில் துருவிய கேரட் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி பிறகு இறக்கி விடுங்கள். இப்பொழுது இதை தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அவ்வளவுதான் இப்போது இன்ஸ்டன்ட் அடை தோசைக்கான மாவு தயார்.

தோசை சுட அடுப்பில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு  சூடானதும், அதன் மேல் அடை தோசை மாவை வட்ட வடிவில் ஊற்றி மூடி வைத்து, பிறகு 4-5 நிமிடம் கழித்து தோசையை திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுங்கள்.  இப்போது சுவையான அடை தோசை ரெடி!! இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபி கண்டிப்பாக நீங்கள் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை உங்களுக்கு தெரிவியுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios