Asianet News TamilAsianet News Tamil

Mallikarjun Kharge : ராமருக்கு சிவன் கடும் போட்டியை கொடுப்பார்...சர்ச்சையில் சிக்கிய மல்லிகர்ஜூன கார்கே பேச்சு

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராமருடன் காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமாரை ஒப்பிட்டு  மல்லிகர்ஜூனே கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Mallikarjun Kharge said that Shiva will give a tough competition to  Rama which has caused controversy KAK
Author
First Published May 1, 2024, 11:55 AM IST

நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஒரு பக்கம் பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக புகார் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகர்ஜூனே கார்கேவின் ராமர் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

மல்லிகர்ஜூனே கார்கே பிரச்சாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஸங்கிர் -சம்பா தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவக்குமார் தஹாரியாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகர்ஜூனே கார்கே பிரச்சாரம் செய்தார். அப்போது,வேட்பாளர் சிவக்குமாரை கடவுள் ராமருடன் ஒப்பிட்டு பேசினார். அதாவது.வேட்பாளர் பெயர் சிவன் குமார் என்றும் இதனால் ராமருக்கு கடுமையாக தேர்தலில் போட்டியை  கொடுக்க முடியும் என பேசினார். இந்த பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Mallikarjun Kharge said that Shiva will give a tough competition to  Rama which has caused controversy KAK

சனாதன சர்ச்சை கருத்து

இந்துக்களின் ஓட்டுக்களை கவர்ந்திழுப்பதற்காக இது போன்று பேசப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்ட முக்கய தலைவர்கள் புறக்கணித்தனர்.மேலும் சனாதன தர்மம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ராமர் கோவில் விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லையா? ராகுல் காந்திக்கு பதிலடி.. அறக்கட்டளை விளக்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios