தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த புரட்சி தளபதி... 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஷால் அறிவிப்பு
நடிகர் விஜய்யை தொடர்ந்து தன்னுடைய அரசியல் வருகையை உறுதிசெய்துள்ள நடிகர் விஷால் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால், அவர் நடிப்பில் தற்போது ரத்னம் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். அவர் இயக்கத்தில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்துள்ள விஷால் இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
ரத்னம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 26-ந் தேதி ரத்னம் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன கையோடு, லண்டன் செல்ல உள்ள விஷால், அங்கு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் விஷால். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... தமிழில் திரிஷா ராஜ்ஜியம்.. சைலண்டாக மலையாளம் பக்கம் ஒதுங்கிய நயன் - லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட அப்டேட் இதோ
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகனான விஷால், தளபதி அரசியல் வருகையை அறிவித்த உடனே அவரும் அரசியலில் குதிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அப்போது அமைதி காத்த நடிகர் விஷால் தற்போது தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். அதன்படி, 2026-ம் ஆண்டு நடைபெற சட்டசபை தேர்தலின் போது கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என நடிகர் விஷால் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமின்றி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருந்தால் கட்டாயம் போட்டியிடுவேன் என கூறி உள்ள அவர், தனிக்கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியுடன் இணைவதா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறி இருக்கிறார். மக்களுக்கு போதுமான வசதி இல்லை என்பதால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்றும் விஷால் சமீபத்திய நேர்காணலில் கூறி இருக்கின்றார்.
இதையும் படியுங்கள்... Dharsha : அளவான கவர்ச்சியில் அசத்தும் நாயகி.. Traditional லுக்கில் நடிகை தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் பிக்ஸ்!