எங்கள் லெஜண்ட் கேப்டன் சாரின் பெயரில் விருது.. வாங்கியதில் ரொம்ப மகிழ்ச்சி.. நெகிழ்ந்த KPY பாலா..
சின்னத்திரை மூலம் பிரபலமான பாலா தற்போது புதிய விருது ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Actor Bala
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார் என்றே கூறலாம்.
KPY Bala
சின்னத்திரை மட்டுமல்லாமல், ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ், கல்வி உதவித்தொகை என தேவையான உதவிகளை செய்து வருகிறார் பாலா.
Vijay TV Bala
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் வந்த பாலாவிடம் கணவரை இழந்த ஏழை தாய் ஒருவர் மகனின் படிப்புக்கு உதவி கேட்க, தன்னுடைய கையில் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலானது.
KPY Bala Award
இந்த நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “15வது நார்வே திரைப்பட விழாவில் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சார் விருதை பெற்றதில் மகிழ்ச்சி. எங்கள் லெஜண்ட் கேப்டன் சாரின் பெயரில் இருந்து விருதை பெறுவது எனது கனவை விட அதிகம்” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் பாலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?