Shabana Quits Mr Manaivi: மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறும் ஷபானா! இது தான் காரணமா?
மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா, அந்த சீரியலில் இருந்து தற்போது வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. தன்னுடைய முதல் சீரியலிலேயே தன்னுடைய அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தொடர் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் முடிந்த கையேடு, விஜய் டிவி சீரியல் நடிகரான ஆரியனை காதலித்து கரம் பிடித்தார். ஷபானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த திருமணத்தில் அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்டது. ஆரியனின் பெற்றோரும் இருவரையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில்... பெற்றோரை மீறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர், ஆரியன் தற்போது ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுக' சீரியலில் நடித்து வருகிறார். ஷபானா சில காலம் சீரியலில் இருந்து விலகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதிரடியாக மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க துவங்கினார்.
இந்த சீரியல் பிரைம் டைமில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இந்த தொடரில் இருந்து ஷபானா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் இருந்து அவர் விலக காரணம், அவர் கர்ப்பமாக இருப்பது தான் என ஒரு தகவல் வெளியாகி வரும் நிலையில், இதனை ஷபானா மற்றும் ஆரியன் இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy Vijay: தன்னுடைய அம்மா ஷோபாவுக்காக தளபதி விஜய் கோவில் கட்டியுள்ளாரா? வைரலாகும் போட்டோ.!
ஒரு பெண் தன்னுடைய கணவரை ஆண் போல் துணிச்சலாக நின்று எப்படி எல்லாம் பார்த்து கொள்கிறார், கணவருக்காக எப்படி பட்ட கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்கிற கதைக்களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் ஷபானா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் யார் என்கிற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.