Diabetes : கோடையில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..?
கோடையில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான உண்மையான காரணம் என்ன..? அதிலிருந்து விடுபட என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாகவே, கோடையில் பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கோடையில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், கோடைகாலம் சர்க்கரை நோயாளிகளுக்கும் தொல்லை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா? கோடைக்காலத்தில் உடலில் சர்க்கரையின் அளவு கூடும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
அதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் கோடைக்காலத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, அதிக வெப்பம் உடலை வறட்சியடையச் செய்யும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால்தான் சர்க்கரை நோயாளிகள் கோடையில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், கோடையில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான உண்மையான காரணம் என்ன..? இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
பொதுவாக கோடையில் உடலில் நீர்ச்சத்து சீக்கிரமாகவே குறைந்துவிடும் என்பதால், உங்களுக்கு தாகம் எடுத்தாலும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். மேலும் மோர் தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இந்த பருவத்தில் பழச்சாறுகள் நல்லதாக இருந்தாலும் சில சமயங்களில் அது சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதுபோல், நேரடியாக சூரிய ஒளியில் படுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உங்களால் முடிந்தவரை காலை 10 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்கு பின்பும் வெளியே வருவதை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் வெயிலில் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக குடையை பயன்படுத்த மறக்காதீர்கள். குறிப்பாக, பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
கோடையில் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக வறுத்த உணவுகளை தவிர்ப்பது ரொம்பவே நல்லது. அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் சாப்பிடுவது நல்லது.
இதையும் படிங்க: Lemon For Diabetes : என்னங்க சொல்றீங்க..'எலுமிச்சை' சர்க்கரை அளவை குறைக்குமா..?
கோடை காலத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தவறாமல் பரிசோதிப்பது மிகவும் அவசியம். ஒருவேளை சர்க்கரை அளவுகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க: Diabetes In Summer : கோடையில் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் இவையே.!!
கோடை காலத்திஎ லேசான உடற்பயிற்சி செய்யலாம். எனவே, காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி அல்லது யோகாசனம் செய்வது நன்மை பயக்கும். ஆனால் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது நல்லதல்ல. இது நீரிழப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D