சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி – 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் 54 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 4 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ரஹானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
அடுத்து வந்த ஷிவம் துபே ரன்கள் எடுக்க போராடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஷிவம் துபே 7 ரன்களில் நடையை கட்டினார். மிட்செல் சாண்ட்னர் 3 ரன்னில் ஆட்டமிழக்க கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி இருவரும் கூட்டணி சேர்ந்தனர்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இதில், ஜடேஜா அதிரடியாக விளையாடினார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் விளையாடி வந்தது. கடைசியாக 2 ஓவருக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்கள் எடுக்கப்பட்டது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இறுதியாக கடைசி ஓவரில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த நிலையில் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் போன்று தான் இந்த போட்டியில் கடைசி ஓவரும் நடந்துள்ளது. கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங், யாஷ் தயாள் பவுலிங். கடந்த சீசனில் 2 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஆனால், இந்த சீசனில் இந்தப் போட்டியில் 2 பந்தில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.