Rathnam: வசூல் வேட்டை ஆடினாரா... கோட்டை விட்டாரா விஷால்! 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஷால் நடிப்பில் நேற்று வெளியான 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஷாலை வைத்து, தாமிரபரணி, பூஜை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி பல வருடங்களுக்கு பின் மீண்டும் விஷாலுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'ரத்னம்'.
அதிரடியான ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விறுவிறுப்பான கதை களத்தில் இயக்கியுள்ளார் ஹரி. இந்த படத்தில்... விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, முரளி ஷர்மா, கெளதம் மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!
நேற்று வெளியான, இந்த படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூபாய் 5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Rathnam
ரத்னம், வழக்கமான ஒரு மாஸ் ஆக்ஷன் டிராமா திரைப்படம் போல் இருப்பதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலம் என கூறப்படுகிறது. ஆனால் கதைக்களம் இப்படத்திற்கு கூடுதல் பலம் என கூறுகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.