Priya Bhavani: மலைக்கு நடுவே... தண்ணீரில் பூத்த தாமரை போல் பிரியா பவானி கொடுத்த போஸ்! சூடான இளம் நெஞ்சங்கள்!
நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆஸ்ட்ரியா நாட்டில் உள்ள, Hallstatt என்னும் பகுதிக்கு வெகேஷனை கொண்டாட சென்றுள்ள நிலையில், இவரது ஹாட் போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பல நடிகைகள், திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடினாலும்... அவர்களால் நிலைத்து நிற்க முடியாமல், வந்த வேகத்தில் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டி விடுகிறார்கள். ஆனால் நடிகை பிரியா பவானி ஷங்கரை பொறுத்த வரையில், இவர் தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது அவரின் அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர், ஒரு வித தயக்கத்துடன் தான் விஜய் டிவி சீரியல் வாய்ப்பை ஒப்புக்கொண்டார். இதன் பின்னர் இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படவே... தானாக சினிமா வாய்ப்பு தேடி வந்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு வெள்ளித்திரை நாயகியாக இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறவே அம்மணிக்கு வாய்ப்புகள் குவிய துவங்கியது. கைவசம் அரை டஜன் படங்கள் இருந்தாலும், அலட்டி கொள்ளாமல் நடித்து வரு இவர், அடிக்கடி தன்னுடைய காதலனுடன் டேட்டிங் செல்லவும் தவறுவது இல்லை.
அந்த வகையில் தற்போது ஆஸ்தியா நாட்டுக்கு சென்றுள்ள ப்ரியா பவானி ஷங்கர்... பலர் செல்ல ஆசைப்படும் டூரிஸ்ட் இடமான, Hallstatt பகுதிக்கு சென்றுள்ளார். சுற்றிலும் மலை, நடுவே தண்ணீர், அருகிலேயே வீடுகள் என இயற்கையின் பேரழகை இந்த இடத்தில் பார்க்கமுடியும். இந்த இடத்தில் நின்றபடி பிரியா பவானி எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Janhvi Kapoor: மனசுல அஞ்சலி பாப்பான்னு நினைப்போ! குட்டை உடையில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த ஜான்வி!