Nayanthara Photos : குறையாத காதலுடன்... குழந்தைகளோடு ஜம்முனு தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
Nayanthara Family
கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். ஐயா படத்தில் தொடங்கிய இவரது பயணம், இன்று பாலிவுட்டில் ஜவான் படம் வரை சக்சஸ்புல்லாக சென்று கொண்டிருக்கிறது. 40 வயதை நெருங்கினாலும் இளமை குறையாமல் இருக்கும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முன்னணியில் இருக்கிறார்.
Nayanthara, vignesh shivan
சினிமா வாழ்க்கையை போல் சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நயன்தாரா, சிம்பு மற்றும் பிரபுதேவா உடனான காதல் தோல்விக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நானும் ரெளடி தான் படத்தில் தொடங்கிய இவர்களது காதல் வாழ்க்கை கடந்த 2022-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது. திரையுலகினர் புடை சூழ விக்கி நயன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?
Nayanthara vishu celebration
திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ள விக்கி - நயன் ஜோடி, அவர்களுடன் பண்டிகைகளை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர்.
Nayanthara Tamil New Year celebration
அந்த வகையில் விக்னேஷ் சிவன் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருக்கிறார். அதேபோல் அவர்களின் குழந்தைகள் உயிர் மற்றும் உலக் இருவரும் வேஷ்டி சட்டை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். நயன்தாரா வெள்ளை நிற சுடிதார் அணிந்தபடி தன்னுடைய பேமிலியோடு ஜம்முனு தமிழ் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். விக்கி - நயன் ஜோடி பகிர்ந்த இந்த புகைப்படங்கள இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... GOAT : வெளியான முதல் சிங்கள் - பாட்டில் வரும் இந்த சீனெல்லாம் கவனிச்சீங்களா? மாஸ் காட்டிய வெங்கட் பிரபு!