கமலின் கல்ட் கிளாசிக் படமான சத்யா.. ரீமேக் செய்ய காத்திருக்கும் இளம் இயக்குனர்? - ஹீரோவாக நடிக்கப்போவது யார்?
Ulaga Nayagan Kamalhaasan : தனது சினிமாவின் மூலம் பல கோடி ரசிகர்களை ஈர்ப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். அவருடைய திரை வாழ்க்கையில் தனித்துவமான பல திரைப்படைகளை எடுத்து, வெற்றியும் கண்டுள்ளார்.
Kamalhaasan
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு "பாட்ஷா" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுப்பதற்கு முன்பே, 1988ம் ஆண்டு உலக நாயகனுக்கு "சத்யா" என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் "சத்யா" திரைப்படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லொள்ளு சபா சேசு காலமானார்!
Ulaga nayagan Kamal
இளையராஜாவின் இசையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. இக்கால இயக்குனர்கள் பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அந்த படம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.
ashok selvan
இந்நிலையில் ஒரு தனியார் youtube சேனல் வெளியிட்டுள்ள தகவலின்படி, "போர் தொழில்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா, சத்யா திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாகவும், பிரபல நடிகர் அசோக் செல்வன் இந்த திரைப்படத்தில் உலகநாயகனின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.