சம்பளத்துல வேணா நீங்க அதிகம்.. சொத்துல நான் தான் அதிபதி.. கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டார் இவர்தான்..
தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர் யாரென்று பலருக்கும் தெரியவில்லை. அந்த பட்டியலில் ரஜினிகாந்த், பிரபாஸ், அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு போன்ற பிரபல நடிகர்கள் இல்லை.
Richest South India's Actor
கல்கி 2898 கிபி படத்திற்கு 150 கோடி ரூபாயும், சலார் படத்திற்கு 100 கோடி ரூபாயும் பிரபாஸ் ஊதியமாக வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
Allu Arjun
மறுபுறம் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன் 125 கோடி ரூபாய் வசூலித்ததாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Mahesh Babu
மகேஷ் பாபு சமீபத்தில் நடித்த குண்டூர் காரம் படத்திற்காக 78 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றார் என்றும் கூறப்படுகிறது.
Nagarjuna Akkineni
இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு மிகப்பெரிய சொத்துக்கு அதிபதியாக தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா இருக்கிறார். நடிகர் நாகார்ஜுனா 3010 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார்.
Nagarjuna Net Worth
கிட்டத்தட்ட 100 படங்களில் பணிபுரிந்த நாகார்ஜுனா, கடைசியாக நா சாமி ரங்கா படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா திரைப்படங்களில் நடிக்க ரூ.9 முதல் 20 கோடி வரை வசூலிக்கிறார்.
Nagarjuna Akkineni Assets
பிக் பாஸ் தெலுங்கு 7 இன் தொகுப்பாளராக முழு சீசனுக்கும் ரூ. 20 கோடியை சம்பளமாக வாங்குகிறார். நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவின் நிகர மதிப்பு ரூ.154 கோடி என்று கூறப்படுகிறது.
Nagarjuna Salary
சக நடிகரான வெங்கடேஷின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2200 கோடி என்று கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு ரூ.1650 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.