எலும்பும் தோலுமாக.. ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய நடிகர் ஜனகராஜ்- லேட்டஸ்ட் photo பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
janagaraj
1980களில் தமிழ் சினிமாவில் செந்தில் - கவுண்டமணி என இரு ஜாம்பவான் நகைச்சுவை நடிகர்கள் கொடிகட்டிப்பறந்த காலகட்டத்தில் அவரிகளுக்கு இணையாக பெயரும், புகழும் பெற்றவர் தான் ஜனகராஜ். அவரின் டயலாக் டெலிவரிக்கும் சிரிப்புக்கும் என தனி ரசிகர் கூட்டமே உண்டு. இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜனகராஜுக்கு தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தார் பாரதிராஜா.
comedy actor janagaraj
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்ல வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் திறம்பட நடித்திருக்கிறார் ஜனகராஜ். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து இவர் நடிக்கும் காமெடி காட்சிகள் வேறலெவல் ஹிட் அடித்தது. ‘தங்கச்சிய நாய் கடிச்சிருச்சு’... ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ போன்ற வசனங்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. இன்றளவும் அது மீம் டெம்பிளேட்டாக உள்ளது.
இதையும் படியுங்கள்... GOAT movie : விஜய்யின் கோட் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே
Rajinikanth, janagaraj
டாப் காமெடியனாக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜனகராஜ், திடீரென சினிமாவை விட்டே விலகினார். பின்னர் அவர் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால் அதெல்லாம் வதந்தி என பேட்டி ஒன்றில் கூறிய ஜனகராஜ், விஜய் சேதுபதியின் 96 படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது அவர் நடிப்பில் தாத்தா என்கிற குறும்படம் உருவாகி இருக்கிறது.
janagaraj Latest Photo
இந்த நிலையில், நடிகர் ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டாரே என அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். அழகும், இளமையும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக ஜனகராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Bhavana: நான் உயிரோடு இருக்கும் போதே இப்படி செய்தார்கள்.. படங்கள் நடிப்பதை குறைத்து கொண்ட காரணத்தை கூறிய பாவனா