பதிலுக்கு பதில் திருப்பி கொடுத்த சிஎஸ்கே – துஷார், சிமர்ஜீத் சிங் வேகத்தில் பஞ்சரான பஞ்சாப்: சிஎஸ்கே வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் இருவரும் ஓரளவு தாக்குபிடித்து ரன்கள் எடுத்தனர். எனினும் கெய்க்வாட் 32 ரன்களில் ராகுல் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஆறுச்சாமி ஷிவம் துபே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
இதே போன்று மிட்செல் 30 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 17, மிட்செல் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
கடைசியாக வந்த தோனி கோல்டன் டக் முறையில் ஹர்ஷல் படேல் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை இழந்தார். அவர் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
இறுதியாக ரிச்சர்டு கிளீசன் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
பின்னர் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், துஷார் தேஷ்பாண்டே வீசிய போட்டியின் 2ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 7 ரன்கள் மற்றும் ரிலீ ரோஸோவ் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
ஷஷாங்க் சிங் மற்றும் பிராபிசிம்ரன் சிங் இருவரும் ஓரளவு தாக்குபிடித்தனர். ஷஷாங்க் சிங் 27 ரன்னில் ஆட்டமிழக்க, பிராப்சிம்ரன் சிங் 30 ரன்னில் வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சாம் கரண் 7 ரன்னிலும், அஷுதோஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
கடைசியில் ஹர்ப்ரீத் பிரார் 17, ஹர்ஷல் படேல் 12, ராகுல் சாஹர் 16 ரன்களில் வெளியேறினர். கஜிஸோ ரபாடா 11 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 7ஆவது தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். மேலும், இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறவே புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match
மேலும், சென்னையில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.